Wednesday, August 1, 2012

ஸ்ரீமந் நாராயணனின் தசாவதாரங்கள்


ஸ்ரீயப்பதியாய், அவாப்த ஸமஸ்த காமனாய், அகிலஹேய ப்ரெத்யனீக கல்யானைக்க தானனாய், க்ருபாநிதியான ஸர்வேஸ்வரன் ஸ்ரீமந் நாராயாணன், ஆச்ரிதர்களை ரக்ஷிப்பதற்காகவும் துஷ்டர்களை சிக்ஷிப்பதற்காகவும் அநேக அவதாரங்கள் செய்துள்ளான். மற்றைய எல்லா உலகங்களைக் காட்டிலும் மிகவும் மேன்மை பெற்ற இந்த பூலோகம், இதனுள்ளும் பாரதவர்ஷத்திலேயே தான் அவையாவும் நிகழ்ந்தன.  
அவற்றுள் முக்கியமானவை தசாவதாரங்கள் என்னும் பத்து அவதாரங்கள். அந்த தசாவதாரங்கள் என்னென்ன என்பதில் நம்முள் சில எண்ணங்கள் இருக்கின்றன்.

எண்ணம் 1:
மத்ஸ்ய, கூர்ம, வராஹ, ந்ருஸிம்ஹ, வாமன, பரசுராம, ரகுராம, பலராம, க்ருஷ்ண, கல்கி 

எண்ணம் 2:
மத்ஸ்ய, கூர்ம, வராஹ, ந்ருஸிம்ஹ, வாமன, பரசுராம, ரகுராம, புத்த, க்ருஷ்ண, கல்கி

நம்முடைய ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயதில் நாம் எந்த எண்ணத்தை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று திருமங்கை ஆழ்வார் மற்றும் ஸ்வாமி வேதாந்த தேசிகன் கூறியுள்ளார்கள் என்பதை பார்போம்.

திருமங்கை ஆழ்வார் அருளிச்செய்த பெரியதிருமொழியில் எட்டாம்பத்து எட்டாந்திருமொழி (வானோரளவும்) கடைசி பாட்டில்

மீனோடாமைகேழலரிகுறளாய் முன்னுமிராமனாய்த்
தானாய் * பின்னுமிராமனாய்த்தாமோதரனாய்க் கற்கியு
மானான்றன்னை * கண்ணபுரத்தடியன் கலியனொலிசெய்த *
தேனாரின்சொல்தமிழ்மாலை செப்பப்பாவம்நில்லாவே.         || 8.8.10   
  1. மீன்
  2. ஆமை
  3. கேழல் (பன்றி)
  4. அரி (சிங்கம்)
  5. குறள் (வாமனன்)
  6. முன்னுமிராமன் (பரசு ராமன்)
  7. தானாய் (தசரத ராமன்)
  8. பின்னுமிராமன் (பலராமன்)
  9. தாமோதரனாய் (கண்ணன்)
  10. கற்கியுமானான் (கல்கி)
ஸ்வாமி ஸ்ரீ நிகமாந்த மஹாதேசிகன் அருளிச்செய்த தஶாவதார ஸ்தோத்திரத்தில்

इच्छा मीन विहार कच् महा पोत्रिन् यत्रुच्छा हरे
रक्षा वामन रोष राम करुणा काकुत्स् हेला हलिन् |
क्रीडा वल्लव कल् वाहन शा कल्किन्निति प्रत्यहम्
जल्न्: पुरुषा: पुनन्ति भुवनम् पुण्यौ पण्याणा: ||      12

இச்சாமீந விஹார கச்சப மஹா போத்ரிந் யத்ருச்சா ஹரே
ரக்ஷா வாமந ரோஷ ராம கருணா காகுத்ஸ்த ஹேலா ஹலிந் |
க்ரீடா வல்லவ கல்க வாஹந தஸா கல்கிந்நிதி ப்ரத்யஹம்
ஜல்பந்த: புருஷா: புந்ந்தி புவநம் புண்யௌக பண்யாபணா: ||          12

இச்சாமீந!
அஸூரனாலே அபஹரித்து ஸமுத்ரமத்யத்தில் வைக்கப்பட்டிருந்த வேதத்தைத் திருப்பவேண்டுமெங்கிற இச்சையாலெடுத்துக் கொண்ட வென்றபடி இப்படியே மேலுங்கண்டுகொள்வது – மீன் (மத்ஸ்ய) அவதாரம் பண்ணியவரே!
விஹாரகச்சப!
விளையாட்டாக எடுத்துக்கொண்ட ஆமை வேஷங்கொண்டவரே!
மஹாபோத்ரிந்!
ப்ரளயஜலம் குளம்பளவாகும்படி பெரியதான பன்றி சரீரமெடுத்தவரே!
யத்ருச்சாஹரே!
ஒருவர் எதிர்பாராமல் தற்செயலாய் ஸிம்மத்தினுருவங்கொண்டவரே!
ரக்ஷாவாமந!
இந்திரனைக் காப்பதற்காக குறுவடிவம் கொணடவரே – குறைவான சரீரம் பூண்டவரே!
ரோஷராம!
தகப்பனைக் கொன்றதற்காக அரசர்களிடத்தில் அரச குலத்தின்மீது கோபங்கொண்டு கோடாலியை ஏந்திய பரசுராம முனிவரே!
கருணா காகுஸ்த!
தயையே வடிவுகொண்டது போலிருக்கிற. ககுத்ஸ்த வம்சத்திலவதரித்த, ஸ்ரீராம!  
ஹேலாஹலிந்!
விளையாட்டுக்காகத் தரித்த கலப்பை என்கிற ஆயுதத்தையுடையவரே!
க்ரீடாவல்லவ!
விளையாட்டுக்காக இடையனுருவங்கொண்டவரே!
கல்கவாஹந தஶாகல்கிந்!
கல்கம் என்கிற, வெள்ளைக் குதிரையை வாஹனமாக்க் கொண்ட தசையில் (காலத்தில்) ‘கல்கமுடையவர்’ என்கிற யதார்த்தமாகப் பெயரையுடையவரே!

திருமங்கை ஆழ்வாரும், ஸ்வாமி வேதாந்த தேசிகனும் இப்படித் தனித்தனியாக தஶாவதாரங்களை ஸ்துதித்து இவ் அவதாரங்களைச் சேர்த்தனுபவிக்குமுப் ஒரு பாசுரமும், ஒரு ச்லோகத்தையும், அதன் பயன்களையும் அருளிச் செய்திருக்கின்றனர்.
ஆதலால், ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயப்படி நாம் பின்பற்றவேண்டியது முதல் எண்ணமே ஆகும்.

No comments:

Post a Comment