Sunday, August 19, 2012

ஸந்தியாவந்தன முறை


தேவிபாகவதம் 11 – ஆவது ஸ்கந்தம் 16, 17, 19 – வது அத்யாயங்களில், ஸந்தியாவந்தன முறையைப்பற்றி விளக்கமாகக் கூறப்பட்டுள்ளது. அவைகளிலிருந்து சில சுலோகங்கள் அர்த்தத்துடன் இங்கு கூறப்படுகின்றன

ஸந்தியாவந்தன காலம்

காலை ஸந்தியாவந்தன காலம்

உத்தமா தாரகோபேதா மத்யமா லுப்ததாரகா |
அதமா ஸூர்யஸஹிதா  ப்ராதஸ்ஸந்த்யா த்ரிதாமதா ||
  1. நக்ஷத்ரங்கள் காணப்படும்போது ஸந்தியாவந்தனம் செய்வது உத்தமம்.
  2. நக்ஷத்ரங்கள் மறைந்தபின், சூரியோதயத்துக்குமுன் செய்வது மத்யமம்.
  3. சூரியன் உதயமாகியபின் செய்வது அதமம். 
இவ்வாறு காலை ஸந்தியாவந்தனத்திற்கு மூன்று காலங்கள்.  

மாத்யாஹ்நிக காலம்

மத்யாஹ்நே மத்யபாஸ்கராம் |

சூரியன் ஆகாசமத்தியில் தலைக்கு நேராக இருக்கும்போது மாத்யாஹ்நிகம் செய்யவேண்டும்.

மாலை ஸந்தியாவந்தன காலம்

உத்தமா ஸூர்யஸஹிதா, மத்யமாஸ்தமிதேரவெள |
அதமா தாரகோபேதா ஸாயம்ஸந்தியா த்ரிதா மதா ||
  1. சூரியன் அஸ்தமிப்பதற்குமுன் செய்வது உத்தமம்.
  2. சூரியன் அஸ்தமித்தவுடன் செய்வது மத்யமம்.
  3. நக்ஷத்ரங்கள் காணப்பட்டபின் செய்வது அதமம்,
இவ்வாறு ஸாயம் ஸந்தியாவந்தனத்திற்கு மூன்று காலங்கள்.

இவைகளையே நம் பூர்வாச்சாரியர்கள் காணாமல், கோணாமல், கண்டு கொடு என்று சொல்லியிருக்கிறார்கள்.

No comments:

Post a Comment